Spotlightசினிமா

அக்கா குருவி விமர்சனம் 3/5

யிர், மிருகம், சிந்து சமவெளி என முழுக்க முழுக்க சர்ச்சை படங்களை இயக்கிய இயக்குனர் சாமி, அடுத்ததாக “அக்கா குருவி” என்ற குடும்ப பாங்கான படத்தை இயக்கியிருக்கிறார். ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் ‘Children of heaven’ படத்தின் அதிகாரப்பூர்வ மறு உருவாக்கம் தான் இந்த “அக்கா குருவி”.

கதைப்படி,

தினசரி கூலி வேலை செய்து அதில் தனது வாழ்க்கையை நடத்தி வரும் நடுத்தர குடும்பம். இக்குடும்பத்தில், கணவன், மனைவி, 10 வயது மதிக்கத்தக்க மகன், 8 வயது மதிக்கத்தக்க மகள். மொத்தத்தில் நால்வர்.

ஏழ்மை நிலையில் இருக்கும் இவர்கள், ஒரு ஷுவை வைத்துக் கொண்டு அண்ணன் – தங்கை இருவரும் எப்படி பள்ளி செல்கிறார். தங்கைக்கு ஒரு ஷூ வாங்கிக் கொடுப்பதற்காக அண்ணன் படும் கஷ்டங்கள் என ஒரு உயிரோட்டமான கதை தான் இந்த “அக்கா குருவி”. தங்கைக்கு ஷூ கிடைத்ததா.? இறுதியில் அண்ணன் – தங்கை இருவரும் பின்னாளில் என்னவாக ஆகிறார்கள் என்பதை மனதை உருக்கும் திரைக்கதையோடு வெளிவந்திருக்கும் படம் தான் “அக்கா குருவி”.

Children of heaven’ படத்தின் உயிரோட்டம் எந்த இடத்திலும் நழுவி விடாமல் மிக கவனமாக கையாண்டு திரைக்கதையை நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் சாமி. ஒரு ஷூ’விற்குள் என்ன இருக்கிறது என கேட்கும் பலருக்கும் இக்கதை ஒரு வலியை நிச்சயம் ஏற்படுத்தும்.

கதையில் நடித்த நாயகன், நாயகி மற்ற சிறுவர்கள் இருவரும் கதையோடு ஒன்றியிருப்பது படத்திற்கு மிகப்பெரும் பலம்.

இளையராஜாவின் இசையில் பின்னனி இசை இதமான சுகம்.. ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் அவரது பழைய பாடல்கள் புத்துணர்ச்சி கொடுத்திருக்கின்றன.
உட்பல் வி நாயனாரின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. கொடைக்கானல் மலைப் பிரதேச காட்சிகள் கண்களை வருடுகின்றன.

ஒரு சில இடங்களில் கதை தொய்வு ஏற்பட்டாலும், அழகான ஒரு பாசப் பிணைப்பை கொடுத்ததற்காக இயக்குனர் சாமியை வெகுவாக பாராட்டலாம்.

Facebook Comments

Related Articles

Back to top button