Spotlightசினிமா

‘கான் சிட்டி’ வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி கூறிய அர்ஜுன் தாஸ்… 25-வது நாள் விழா கோலாகலம்!

ர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘கான் சிட்டி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், படத்தின் 25-வது நாள் வெற்றி மற்றும் நன்றி அறிவிப்பு விழா உற்சாகமாக நடைபெற்றது.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இப்படம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விழாவில் அர்ஜுன் தாஸ், வடிவுக்கரசி, விடிவி கணேஷ், இமான் அண்ணாச்சி, கல்கி ராஜா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு ரசிகர்கள், ஊடகங்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

நடிகர் அர்ஜுன் தாஸ், படத்திற்கு கிடைத்த வரவேற்பு இயக்குநர் ஹரிஷ் துரைராஜின் உழைப்புக்கான வெற்றி எனக் குறிப்பிட்டார். மேலும், படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கிய படக்குழுவிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

வடிவுக்கரசி, இந்தப் படம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான திருப்பமாக அமைந்ததாகவும், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அளித்த பாராட்டுகள் தனக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ், சிறிய படமாக இருந்தாலும் நல்ல உள்ளடக்கம் காரணமாக ரசிகர்களின் ஆதரவை பெற்றதே இந்த வெற்றிக்கு காரணம் எனக் கூறி, தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, கடனில் சிக்கிய குடும்பத்திற்கு எதிர்பாராத விதமாக பணம் அச்சிடும் இயந்திரம் கிடைத்தால் என்ன நடக்கும்? என்ற சுவாரஸ்யமான கதைக்களத்தில் உருவான ‘கான் சிட்டி’, நகைச்சுவை, பரபரப்பு மற்றும் குடும்ப உணர்வுகளுடன் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button