
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான திரு. கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி உயிரிழந்தார்.
அவருக்கு கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் மைசூரில் சிலை உருவாக்கும் பணி நடந்து வருகிறது.தற்போது அந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் வரும் 16ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் அண்ணாவின் சிலையும் கலைஞர் கருணாநிதி சிலையும் திறக்கப்படவிருக்கிறது. இந்த விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இருவருக்கும் திமுக அழைப்பிதழ் அனுப்பி உள்ளது.
ரஜினி மற்றும் கமல் இருவரும் கருணாநிதியுடன் நெருக்கமான நண்பர்களாக இருந்து வந்ததால் அவர்களும் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.




