Spotlightதமிழ்நாடு

அதிமுக, பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பா.ஜ.கதான் முடிவு செய்யும் – எல்.முருகன்!!

பாஜக தலைமைதான் முதல்வர் வேட்பாளரை முடிவுசெய்யும் என்று அரியலூரில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.

‘விவசாயிகள் நண்பன் மோடி’ என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கிராம விவசாயிகளைச் சந்தித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை விளக்கும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் கள்ளபெரம்பூரில் தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டம் மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பேசிய எல்.முருகன், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை கிடைத்து, அவர்கள் மோடி பக்கம் வந்து விடுவார்களோ பயந்து திமுகவும் இடதுசாரிக் கட்சிகளும் அவற்றுக்கு எதிராக மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றன என்று விமர்சித்தார்.

இந்தக் கூட்டத்திற்குப் பின்பு பேட்டியளித்த எல்.முருகன், ஏற்கனவே உள்ள கூட்டணி தொடர்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை ஒருங்கிணைப்பாளரும் அமித்ஷா பங்குபெற்ற கூட்டத்தின்போது நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏற்பட்ட கூட்டணி தொடரும் என அறிவித்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார். மேலும், முதல்வர் வேட்பாளர் குறித்து தேசியத் தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

எல்.முருகன் அரியலூர் மாவட்டம் தா.பழூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடையும் என கூறினார். அதிமுக, பாஜக கூட்டணியில் யாருடைய தலைமையில் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது என்பதையும், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close