
தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான ‘பிளாஸ்ட்’ (Blast) திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் ஆதரவை பெற்ற இப்படம், தற்போது உலகளவில் சுமார் ரூ.76 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தின் அதிரடி திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள், முன்னணி நடிகர்களின் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதன் காரணமாக வார நாட்களிலும் திரையரங்குகளில் நல்ல பார்வையாளர் வருகை பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பகுதிகளிலும் படம் நல்ல வசூலைப் பதிவு செய்து வருகிறது.
படம் வெளியான சில நாட்களிலேயே ரூ.50 கோடியை கடந்த நிலையில், தற்போது உலகளவில் ரூ.76 கோடி வசூலை எட்டியுள்ளது. இந்த வசூல் மூலம், இந்த ஆண்டின் வெற்றிப் படங்களின் பட்டியலில் ‘பிளாஸ்ட்’ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரும் வெற்றி படமாக இந்த படம் அமைந்துள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
ஓடிடி தளத்தில் படம் வெளிவந்தும் கூட, ஒரு சில திரையரங்குகளில் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




