
எஸ் பி சக்திவேல் இயக்கத்தில் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி ப்ரியா சந்திரமெளலி, மாஷும் ஷங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பயணிகள் கவனிக்கவும்”.
நேரடியாக “ஆஹா” ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது இப்படம்.
இப்படம் வெளியான நாள்முதல் தொடர்ந்து மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
கடந்த சில வருடங்களில் இப்படியொரு உணர்ச்சிமிக்க படத்தை பார்த்ததில்லை என்றும் பலர் கூறி வருகின்றனர். விதார்த்தின் நடிப்பை அனைவரும் வெகுவாகவும் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவிற்கு இந்த மாதிரியான படைப்புகள் அவ்வப்போது வந்து செல்வதுதான் தமிழ் சினிமாவிற்கு அழகு என்றும் கூறி வருகின்றனர்.
மக்கள் மத்தியில் கிடைத்த இந்த அமோக வரவேற்பால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.




