
சென்னை: சென்னை அருகேயுள்ள ஊரப்பாக்கம் பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் சுலேகா(வயது 19). இவர் செல்லம்மாள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி ஏ படித்து வருகிறார்.
ஊரப்பாக்கம் இரயில் நிலையத்திற்கு சைக்கிளில் செல்லும் சுலேகா, இன்று காலை சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியாக மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சுலேகா மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட சுலேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அப்பகுதி மக்கள், அவ்வழியாக மணல் ஏற்றி வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட லாரிகளை அடித்து நொறுக்கி விட்டனர். பெரும் பரபரப்பாக உள்ள அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.
Facebook Comments





