
திரைப்பட தயாரிப்பாளர்களின் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதில் ஏற்கனவே, ஜே எஸ் கே சதீஷ், டி சிவா தலைமையிலான ஒரு அணி களமிறங்கிறது.
தற்போது இராம நாராயணன் முரளி தலைமையிலான அணி களமிறங்கியுள்ளது.
இதற்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி என்ற பெயரில் களமிறங்குகிறது. இதன் தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று (18.03.2020 புதன்கிழமை) சிறப்பாக நடைபெற்றது.
இதில்,
தலைவர் பதவிக்கு இராம நாராயணன் முரளி என்கிற N.ராமசாமி
உப தலைவர் பதவிக்கு சுபாஷ் சந்திரபோஸ், மைக்கேல் ராயப்பன்
செயலாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன், K J R
பொருளாளர் பதவிக்கு சந்திர பிரகாஷ் ஜெயின்
மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
அதில் பெருவாரியான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
S.V.சேகர் உள்ளிட்ட பல பெரிய தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்..





