Uncategorized

சிபியை ஓரங்கட்டிய சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “ஜெயிலர்”.

படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருட கோடை விடுமுறையை முன்னிட்டு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அடுத்ததாக டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியது.

இவர் கூறிய கதை, ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்து போனதாகவும், உடனே முழுக் கதையை ரெடி பண்ண கூறியதாகவும் தகவல் வெளியானது.

சில நாட்கள் கழித்து பவுண்டட் ஸ்கிரிப்டை படித்த ரஜினிகாந்த், மிகவும் சோர்ந்துவிட்டாராம். இப்போதைக்கு இந்த கதை வேண்டாம், பார்த்துக்கலாம் என்று கூறி சிபியை அனுப்பி விட்டாராம்.

அடுத்த இயக்குனரின் கதைக்காக காத்திருக்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Facebook Comments

Related Articles

Back to top button