Spotlightவிமர்சனங்கள்

வேடுவன் – விமர்சனம் 3.5/5

பவண் எழுதி இயக்கியிருக்கும் இணையத் தொடர் தான் இந்த “வேடுவன்”. ஜீ5 தளத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

இந்த தொடரில், கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ஐஸ்வர்யா ரகுபதி, வினுஷா தேவி, லாவன்யா, ரேகா நாயர், பார்வதி, மற்றும் ஜீவா ரவி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஸ்ரீநிவாசன் தேவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விபின் பாஸ்கர் இசையமைத்திருக்கிறார்.

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இந்த தொடரை தயாரித்திருக்கிறார்.

தொடரிலும் பிரபல நடிகராக வருகிறார் சூரஜ்(கண்ணா ரவி). இவர் நடித்து வெளிவந்த ஒரு படம் படுதோல்வியை சந்திக்கிறது. தோல்விக்குக் காரணம், சூரஜ் கதைக்குள் இன்வால்வ் ஆகிறார் என்று சினிமா ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், புதிய படத்திற்காக கண்ணா ரவியிடம் கதை கூற வருகிறார் ஒருவர். இந்த படத்தில் நீங்கள் ஒரு அண்டர்கவர் போலீஸ் என்று கூறுகிறார். கதையின் ஒன்லைன் பிடித்துப் போக படத்தில் தான் நடிப்பதாக ஒத்துக் கொள்கிறார் கண்ணா ரவி. அதுமட்டுமல்லாமல், இந்த கதை ஒரு உண்மைச் சம்பவம் என்று அறிந்து கொள்கிறார்.

கதை (படப்பிடிப்பு) தொடங்குகிறது. அண்டர் கவர் போலீஸாக இருக்கும் கண்ணா ரவி( அருண் மொழி வர்மன்)க்கு மனைவியும் 5 வயது மதிக்கத்தக்க ஒரு மகனும் இருக்கிறார். அண்டர்கவர் போலீஸான கண்ணா ரவி, பிரபல ரெளடி ஒருவரை பல மாதங்களாக பிச்சைக்கார வேடம் தறித்து, தொடர்ந்து கண்காணித்து சரியான சமயத்தில் அவரை என்கெளண்டர் செய்கிறார்.

இவர் போலீஸாக இருப்பது இவரது மனைவிக்கும், போலீஸ் உயரதிகாரி ஒருவருக்கு மட்டுமே தெரிகிறது.

இந்நிலையில், போலீஸ் உயரதிகாரி அடுத்த அசெய்ன்மெண்ட் ஒன்றை கண்ணா ரவியிடம் கொடுக்கிறார். சிறுவயதில், பல கொலைகளை செய்து பெரும் ரெளடியாக ஆன பின்பு, ஊர் மக்கள் அனைவராலும் மரியாதைக்குறியவராக தன்னை மாற்றிக் கொண்ட சஞ்சீவை என்கெளண்டர் செய்ய கண்ணா ரவியிடம் அசெய்ன்மெண்ட் கொடுக்கப்படுகிறது.

அதற்காக, சஞ்சீவ் இருக்கும் கிராமத்திற்குச் செல்கிறார் கண்ணா ரவி. அங்கிருக்கும் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து, சஞ்சீவை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். ஒரு சில நாட்கள் கழித்து தான் கண்ணா ரவிக்கு தெரிய வருகிறது, தனது எக்ஸ் காதலியான வினுஷா தேவியின் கணவர் தான் சஞ்சீவ் என்று.

அதன்பிறகு, அருண் மொழி வர்மன் (கண்ணா ரவி) எடுத்த முடிவு என்ன.?? இந்த கதையால் ஹீரோ சூரஜ் (கண்ணா ரவி) என்ன மனநிலைக்குச் சென்றார்.?? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு மீதமிருக்கும் தொடரில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர் பவன்.

சூரஜ் என்ற நடிகனின் கதாபாத்திரத்திலும், மொழி என்ற போலீஸ் கதாபாத்திரத்திலும் மிகவும் கச்சிதமாக பொருந்தி தனது கதாபாத்திரத்தை மிகவும் அழகாக செய்துமுடித்திருந்தார் கண்ணா ரவி. பிச்சைக்காரனாக நடித்திருந்த காட்சிகளில் தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிப்புக்கு சரியான தீணி கொடுத்திருந்தார் கண்ணா ரவி.

தனது மனைவியிடம் காதலை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும், தான் கொல்ல வந்த ரெளடி தான் தன் எக்ஸ் காதலியின் கணவன் என்றறிந்து உணர்ச்சியை வெளிப்படுத்தும் இடமாக இருக்கட்டும், சஞ்சீவ் மற்றும் கண்ணன் ரவி இருவருக்குமான கான்வர்சேஷனாக இருக்கட்டும் என பல இடங்களில் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் கண்ணா ரவி.

உடையில், நடையில், பார்வையில், பேசும் வசனத்தில் என தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சஞ்சீவ். அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்து அசத்தியிருந்தார்.

விணுஷா தேவியின் கண்கள் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. மேலும், தொடரில் நடித்திருந்த ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ஐஸ்வர்யா ரகுபதி, லாவன்யா, ரேகா நாயர், பார்வதி, மற்றும் ஜீவா ரவி உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்திருந்தனர்.

தொடர் ஆரம்பித்தது முதல் இறுதி வரையிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற பார்வையிலேயே திரைக்கதையை நகர்த்தி நம்மை சீட்டின் நுனியிலே அமர வைத்துவிட்டார் இயக்குனர் பவண்.

இதற்கு முன் இப்படியான அண்டர்கவர் போலீஸ் கதாபாத்திரங்கள் பொருந்திய படங்கள் சில வந்தாலும், இத்தொடர் அவற்றிலிருந்து சற்று மாறுபட்டு தனித்தே நின்றிருக்கிறது.

தொடருக்கு தொடர் ட்விஸ்ட் காட்சிகளை வைத்து, தொடரை விறுவிறுப்பாகவே கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

சஞ்சீவ் கதாபாத்திரத்தை இன்னும் தெளிவாக பதிவு செய்திருக்கலாமே.?

தொடருக்கான தீம் பி ஜி எம் பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. ஸ்ரீநிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவு காட்சிகளை மிகவும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

மொத்தத்தில்,

வேடுவன் – த்ரில்லர் தொடரில் இது ஒரு தனி ரகம் தான்…

Facebook Comments

Related Articles

Back to top button