
விஜய் சேதுபதி படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு ஆர்வம் எட்டி பார்க்காமல் இருந்தது இல்லை. அவரது 25 படமாக உருவாகியுள்ளது இந்த ‘சீதக்காதி’.
நாடக கலைஞர்களை பற்றி உருவாக்கப்பட்டதுதான் இந்த ’சீதக்காதி’. நாடக கலைஞர்களுக்கு பெரும்பாலும் சினிமாவில் நடிக்க பெரிதும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதற்கான காரணம் என்ன என இப்படத்தில் தெளிவாக விளக்கி உள்ளார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.
படத்தில் 40 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் தனது கதாபாத்திரத்தை செவ்வனே செய்து முடித்து இருக்கிறார் மக்கள் செல்வன் ’விஜய் சேதுபதி’. வயதான தோற்றத்தில் அவர் ஏற்று நடித்த ”ஐயா ஆதிமூலம்” கேரக்டர் இன்னும் அவர் நூறு படங்கள் நடித்தாலும் பெயர் சொல்லும் கதாபாத்திரமாக இக்கதாபாத்திரம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மற்ற கேரக்டர்களில் நடித்துள்ள அனைவரும் நம்மை கவனிக்க வைத்திருக்கிறார்கள் முதல் பாதியில் வரும் ராஜ்குமார் ஆகட்டும் பக்ஸ் ஆகட்டும் அனைவரும் தங்கள் கேரக்டரை தெளிவாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலம் என்று கூறினால் அது ‘சுனில்’தான். கிட்டத்தட்ட வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் அக்கதாபாத்திரத்தை காமெடி கலந்த கேரக்டராக கொடுத்து இருக்கிறார் சுனில்.
சுனில் 20 டேக் வாங்கும் காட்சிகளில் திரையரங்குகளில் சிரிப்பலைகள் ஆர்ப்பரிக்கின்றன.
படம் முழுவதும் ஐயா சீதக்காதி என்ற கதாபாத்திரத்தை வைத்து கொண்டு செல்வது தமிழ் சினிமாவில் புதிய முயற்சி.
விஜய் சேதுபதி தனது ரசிகர்களுக்கு ஒரு மகத்தான விருந்து படைத்துள்ளார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்கி தனக்கான இரண்டாவது படைப்பு முத்திரையை பதித்திருக்கிறார்.
கோவிந்த வசந்தா இசையில் ‘ஐயா’ பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னனி இசை கதையோடு பயணம்.
சரஸ்காந்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.
சீதக்காதி – நடிப்பு விருந்து