சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை நேற்று சந்தித்த தமிழக ஆளுநர், பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல், நீங்கள் என் பேத்தி மாதிரி என்று கூறி அவரது கன்னத்தில் தட்டிச் சென்றார். தொடர்ந்து, ஆளுநர் தனது கன்னத்தில் தட்டியது தமக்கு அருவருப்பாக இருந்ததாகவும் அந்த பெண் பத்திரிகையாளர் வேதனை தெரிவித்திருந்தார்
இதையடுத்து, ஆளுநரின் செயலுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளது. அந்த வகையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பெண் பத்திரிகையாளரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதில், “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே” என பதிவிட்டுள்ளார்.
ஹெச்.ராஜாவின் இந்த பதிவுக்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தரம் தாழ்ந்து விமர்சிக்கும் நாகரீகமற்ற அரசியல்வாதி ஹெச்.ராஜா என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.