Spotlightவிமர்சனங்கள்

இஃக்லூ; விமர்சனம்

ம்ஜத் கான், தனது இரண்டு செல்ல மகளையும் பாசத்தோடு வளர்க்கும் ஒரு தந்தை. அம்மாவின் நினைப்பே இல்லாமல் தனது மகள்களை வளர்க்கிறார்.

ஒருநாள், தனது மகள் விபத்திற்குட்பட்டு கோமா நிலைக்கு சென்று விடுகிறாள். டாக்டர் மகளிடம் அவளுக்கு பிடித்தமான கதை எதாவது சொல்லுங்கள் என்று கூற, அம்ஜத் கான் தனது மகளிடம் தனது காதல் கதையை கூறத் தொடங்குகிறார்.

படம் ப்ளாஷ் பேக் செல்கிறது. நல்ல விதமாக அம்ஜத் கானுக்கும் அஞ்சு குரியனுக்கும் காதல் செல்ல, திடீரென அஞ்சு குரியனுக்கு இரத்த புற்றுநோய் வர, அதிர்ச்சியாகின்றனர் குடும்பத்தினர்.

வயிற்றில் தனது குழந்தையையும், உடம்பில் நோயையும் சுமந்து தவிக்கும் தனது மனைவியை நாயகன் எப்படி கவனித்துக் கொண்டார்….?? கோமா நிலையில் உள்ள மகள் கண் விழித்தாரா இல்லையா.. ??? என்பதே படத்தின் மீதிக் கதை.

சிவா கதாபாத்திரத்தில் அம்ஜத் கானும் ரம்யா கதாபாத்திரத்தில் அஞ்சு குரியனும் நடி,த்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

காதலில் வரும் ஈகோ, சண்டை, பாசம், நேசம், என அனைத்திலும் இருவரும் தங்களது பங்களிப்பை தெளிவாக கொடுத்து படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

புற்றுநோய் வந்த பிறகு நோயாளியாக தான் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் கைதட்டலை பெறுகிறார் அஞ்சு குரியன்.

நோய் வந்த தனது மனைவியை அரவணைக்கும் கணவனாக அம்ஜத் கானும் தனது கதாபாத்திரத்தை தெளிவாக நடித்து கொடுத்திருக்கிறார்.

படத்தில் நடித்த அழகான இரு தேவதைகளும், நடிப்பிலும் அழகுதான்.

தனது முதல் படமான ‘இக்லு’வில் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்துவிட்டார் இயக்குனர் பரத் மோகன். தமிழ் சினிமாவிற்கு அழகான காதல் காவியத்தை படைக்கும் ஒரு இயக்குனர் கிடைத்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்..

எப்போதுமே ஒரு இயக்குனருக்கு இருக்கும் பெரிய சவால், ரசிகர்களை கதையோடு பயணிக்க வைப்பது தான், அந்த பயணத்தை மிகக் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் இயக்குனர்.

அரோல் கரோலியின் இசையில் பின்னனி இசை கதையோடு இலசாக பயணிக்க வைக்கிறது… அதுவே மனதிற்கான வருடலும் கூட…

இஃக்லூ – தீட்டப்படாத அழகான காதல் ஓவியம்…

ZEE5 ORIGINAL மூலமாக இப்படத்தை இணையத்தில் கண்டு மகிழுங்கள்..

Facebook Comments

Related Articles

Back to top button