Spotlightதமிழ்நாடு

விடிய விடிய மது ஆட்டம்… 150 ஐடி ஊழியர்கள் அதிரடி கைது!

சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு பிரபல தனியார் ரிசார்ட்டில் சட்ட விரோத மது விருந்தில் பங்கேற்ற 7 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சட்டவிரோதமாக மது விருந்து நடைபெறுவதாக காவல்துறை உயர் அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி தலைமையில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது.

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த பெண் காவலர்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ரிசார்ட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

சோதனையில் ரிசார்ட்டில் மது மற்றும் போதை பொருளான கஞ்சா விருந்து நடைபெற்றதும், அதில் கலந்து கொள்வதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ததும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து மது விருந்தில் பங்கேற்ற 7 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர். ரிசார்ட்டில் கைது செய்தவர்களை போலீசார் வேனில் ஏற்றி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

அவர்களின் உடைமைகள், கைப்பை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் (IT) என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button