சென்னை: தியாகராய நகரில் தமிழ்நாட்டுக்கான தலைமைத்துவம், அடுத்தச் சுற்று என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் நேற்று பேசிய கமல்ஹாசன், ஆர்.கே.நகர் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் வாங்கிய வாக்காளர்களை அழைத்து உரிமையோடு திட்டியதாகக் கூறினார்.
தனது சொந்தப் பணத்தில் கட்சி நடத்தி வருவதாகவும் கமல் குறிப்பிட்டார். வெற்றி என்பது குறிப்பிட்ட வழியில் கிடைக்க வேண்டும் எனக் கூறிய கமல், தாம் தோல்வி கூட அடைவேன். ஆனால், வாக்காளர்களுக்கு ஒருபோதும் பணம் தரமாட்டேன் என்று தெரிவித்தார்.
Facebook Comments