Spotlightசினிமா

அதிக எதிர்பார்ப்புடன் தீபாவளி தினத்தில் வெளிவருகிறது ‘கைதி’!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உருவாகியிருக்கிறது ‘கைதி’. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காட்சியமைப்பு என அனைத்தும் மிகவும் நேர்த்தியாக காட்சியமைக்கப்பட்டுள்ளது.

யூ ட்யூப் தளத்தில் இதுவரை சுமார் 47 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ள இந்த ட்ரெய்லர். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

படத்தை பார்த்த சென்சார் குழு அதிகாரிகள் U/A தரச் சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும், படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி தின கொண்டாட்டமாக வெளிவருகிறது கார்த்தியின் கைதி.

Facebook Comments

Related Articles

Back to top button