
விஸ்வாசம் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படம் ”தல 59” என அழைக்கப்படுகிறது.
இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இது “பிங்க்” என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
தல 59 படத்தை தொடர்ந்து ”தல 60” படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல் என்னவென்றால் ”தல 60 படம்” விஸ்வாசம் படத்தை போன்றே ஒரு மாஸ், கமர்ஷியல் படமாக இருக்குமாம்.
இந்த தகவலை அவரே கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
Facebook Comments





