சென்னை வடபழனியில் திரைப்பட்டறை என்ற சினிமா பயிற்சி கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, கலைத்துறையில் சிறந்து விளங்கி தங்களது திறமைகளை வெளிக்காட்ட ஒரு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.
சுமார் 30 சிறுவர், சிறுமிகளும், 60க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இன்று ‘மாணவன்’ என்ற தலைப்பில் ஒரு நாடக நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது.
தான் படிக்கவில்லை என்றாலும் தன் மகனை ஒரு மிகப்பெரிய இஞ்சினியராக ஆக்க வேண்டும் என்று ஏங்கித் தவிக்கும் ஒரு ஏழை விவசாயி.
தன் மகனை மிகப்பெரிய பொறியியல் கல்லூரியில் சேர்த்து விடுகிறார். கிராமபுறத்தில் இருந்து வரும் அந்த மாணவன் ஆங்கிலத்தில் பேச முடியாமல் தவிக்கிறான். கல்லூரி சீனியர் மாணவர்களால் அதிகமாக ரேக்கிங் செய்யப்படுகிறான், ஒதுக்கப்படுகிறான்.
முதல் செமஸ்டரில் தோல்வியை சந்திக்கும் அந்த மாணவன் தற்கொலை முடிவுக்கு செல்கிறான். ப்ளாட்பாரத்தில் கைத்துண்டு விற்கும் ஒருவன் அந்த மாணவனை காப்பாற்றி அட்வைஸ்(ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான் என்று) செய்து அனுப்பி வைக்கிறான்.
கடுமையான முயற்சிக்குப் பிறகு தன் திறமையை மற்றவர்கள் முன் நிரூபிக்கிறான் அந்த மாணவன்.
இதுவே இந்நாடகத்தின் கதை…..
கதையில் நடித்த மாணவன், மாணவனின் தந்தை, சீனியர், கைத்துண்டு விற்பவன் என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை மனதில் உள்வாங்கி நடித்து. தங்களது திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.
மாணவன் தனது அப்பாவித் தனமான நடிப்பிலும், மாணவனின் தந்தை ஏழையானவன் கதாபாத்திரத்திலும் அதிக ஸ்கோர் செய்துள்ளனர்.
நடிகர்கள்
மாரிமுத்து : ராஜேஷ்
அப்பா : ஆனந்த்
senior student விக்கி :சரத்
senior student ரேஷ்மா : சக்தி
மிச்சர் பாய் ;ஆனந்த்
கைக்குட்டை விற்பவன் :முருகன்
ப்ரொபசர் :நிவேதா
எழுத்து இயக்கம்:L. ராம்
வசன உதவி :மதன் ,விஜி
பல கலைஞர்களை உருவாக்கிக் கொடுக்கும் இந்த திரைப்பட்டறை மேலும் மேலும் வளர வாழ்த்துவோம்.