
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் நான்காவது படமாக வெளிவந்திருக்கும் படம் தான் அசுரன். இப்படத்தில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைத்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது இப்படம். பல நட்சத்திரங்களாலும் பிரபலங்களாலும் தொடர்ந்து பாராட்டுகளை பெற்ற வண்ணம் உள்ளனர் இப்படக்குழுவினர்.
ஒரு தடவை மட்டுமல்லாமல் ரசிகர்கள் இரண்டு முதல் மூன்று தடவை இந்தப் படத்தைப் பார்த்ததாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாங்குநேரி பகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தூத்துக்குடியில் நேற்றிரவு இப்படத்தை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, ‘ #Asuran – படம் மட்டுமல்ல பாடம்!
பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!
கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் VetriMaaran -க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் #Dhanush -க்கும் பாராட்டுகள்’ என்று கூறியுள்ளார்.