Spotlightசினிமா

’மாரி -2’ எதிர்பார்ப்பு; ரேஸில் முதலிடத்தில் தனுஷ்!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ்,கிருஷ்ணா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ளது ‘மாரி 2’. வரும் 21ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், கனா, சிலுக்குவார் பட்டி சிங்கம், சீதக்காதி, அடங்கமறு உள்ளிட்ட பெரிய படங்களும் அன்றைய தின ரேஸில் கலந்து கொள்ளவிருக்கின்றன.

சில தினங்களுக்கு முன் மாரி 2 படத்தின் ஒரு பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

இரண்டும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. ட்ரெய்லர் 1 கோடி பார்வையாளர்களாலும், பாடலும் ஒரு கோடி பார்வையாளர்களாலும் பார்க்கப்பட்டு அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளது மாரி 2.

தனுஷ் ரசிகர்களுக்கு சரியான தீணியாக ‘மாரி 2’ இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

‘யார் இடத்துல வந்து யார் சீன் போட்றது’… இது படத்தோட டயலாக் தான்.

Facebook Comments

Related Articles

Back to top button