Spotlightதமிழ்நாடு

டிச 15 முதல் கனமழைக்கு வாய்ப்பு!

தெற்கு அந்தமான் மற்றும் சுமத்திரா தீவு இடையே டிசம்பர் 9ம்தி தேதி புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது, இது தற்போது நிலவும் காற்றழுத்த சுழற்சியுடன் இணைந்து வலுவான காற்றழுத்த தாழ்வுநிலையாக தெற்கு அந்தமான் அருகே மாறும்.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலிமையான புயலாக மாற வாய்ப்புள்ளது, ஆனால் இது வலிமையடைந்து பெரும் புயலாக மாறி தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்துவிடும்.

டிசம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் தமிழக கடற்கரையை நோக்கி வரும் புயல், வட தமிழகத்தை நோக்கி வந்தால் சிறு புயலாக மட்டுமே இருக்கும். இது தமிழகத்திற்கு மழை தரும் நிகழ்வாகவே இது அமையும். புயல் ஆந்திர நோக்கி நகர்ந்தால், தமிழகத்திர்ற்கு குறிப்பாக சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக மிக கனமழையை கொடுக்கும். திருவள்ளூர் தொடங்கி புதுச்சேரி வரையிலான வட கடலோர பகுதிகளில் நல்ல மழை எதிரிபார்க்கலாம். இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் தன்மையை பற்றி ஆராய்ந்து வருவதாகவும், தமிழக கடல் பகுதிகளில் நிலவும் வெப்பத்தை பொறுத்தே நிகழ்வுகள் அமையும் என வானிலை ஆய்வாளர் செல்வகுமார் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் இன்னும் 9 நாட்கள் இருப்பதால் அதன் போக்கில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும், அடுத்தடுத்த நாட்களில் இதன் நகர்வுகள் தெரியவரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button