Spotlightதமிழ்நாடு

எனக்கும் அந்த ஆடியோவுக்கும் எந்தவித சம்மந்தமுமில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

 

வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:

”அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது, ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் அல்ல. என் மீது களங்கம் கற்பிக்கவே போலியான ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

ஆடியோவின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சசிகலா குடும்பத்தையும், தினகரனையும் நான் கடுமையாக எதிர்ப்பதால், என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தவறான ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் போலியான ஆடியோவை தயார் செய்து வெளியிட்டுள்ளார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button