Spotlightசினிமா

நடிகர் சங்க தேர்தல்; பணப்பட்டுவாடா செய்யும் ஆளுங்கட்சி எம் எல் ஏ – ஷாக்கிங் ரிப்போர்ட்!

ல திருப்பங்களை முன்னிறுத்தி தமிழக அரசியலை போன்று நடிகர் சங்க தேர்தலையும் மிகவும் பரபரப்பாக ஆக்கிவிட்டனர் சிலர்.

வெறும் 3 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கொண்ட ஒரு சங்கத்தின் தேர்தலை நடத்த முடியாமல் பல இடங்களில் இருந்தும் அழுத்தம் வருவது ஏனோ என பலரால் அரிய முடியவில்லை.

நடிகர் சங்க தேர்தலில் இம்முறையில் விஷால் பாண்டவர் அணியும் ஐசரி கணேசனின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதிக் கொள்ளவிருக்கின்றன.

இதில் சுவாமி சங்கரதாஸ் அணியின் ஐசரி கணேஷ், ஆளும் அதிமுக ஆட்சியின் பின்புலத்தோடு இந்த தேர்தலை சந்திக்கிறார்.

எப்படியும் இந்த நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு ஓட்டிற்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வரை வழங்கவும் ஐசர் கணேஷ் ஏற்பாடு செய்துள்ளாராம்.

மேலும், இந்த ப்ளானை செய்து முடிக்க ஆளுங்கட்சி எம் எல் ஏ சக்திவேல் மற்றும் முன்னாள் மேயர் சவுண்டப்பன் ஆகிய இருவருக்கும் ஆளும் தரப்பு உத்தரவிட்டுள்ளதாம். இந்த செய்தியை கருணாஸ் நேற்றைய பேட்டியில் கூறியிருந்தார்.

இவ்வளவு பணம் கொடுத்து, பல கோடிகளை செலவு செய்து பதவிக்கு வருபவர்கள், அந்த பணத்தை எப்படி எடுப்பது என்று தானே யோசிப்பார்கள்..? சங்கத்தின் நலனுக்காக பாடுபடுவார்களா என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று தான்.

Facebook Comments

Related Articles

Back to top button