Spotlightசினிமாவிமர்சனங்கள்

சந்திரமுகி 2 – விமர்சனம் 3/5

ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், கங்கனா ரனாவத், லக்‌ஷ்மி மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “சந்திரமுகி 2”.

கதைப்படி,

குடும்ப குல தெய்வ கோவிலை வழிபடுவதற்காக தனது சொந்த கிராமத்திற்கு பல வருடங்கள் கழித்து வருகின்றனர் ராதிகாவின் குடும்பத்தினர். ராதிகாவின் மகள் வழி பேரன், பேத்திக்கு கார்டியனாக வருகிறார் லாரன்ஸ்.

அவர்களும் அந்த கிராமத்திற்கு சாமியை வழிபடுவதற்காக வருகின்றனர். இவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் வேட்டையன் அரண்மனையில் தங்குகிறார்கள்.

குலதெய்வம் கோவிலில் பூஜை தொடங்க ஆயத்தமாகும்போது, அரண்மனைக்குள் சந்திரமுகி கிளம்பி விடுகிறாள். பல வருடங்களுக்கு முன் தன்னைக் கொன்ற வேட்டையனை பழி வாங்க மீண்டும் வருகிறார். அந்த வீட்டிற்குள் இருக்கும் ஒரு பெண்ணின் உடம்பிற்குள் சந்திரமுகி இறங்குகிறாள்.

பல வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகியின் பழி வாங்கும் திட்டம் பழித்ததா.? லாரன்ஸ் எப்படி வேட்டையனாக உள்ளே வந்தார்.? என்பது தான் படத்தின் மீதிக் கதை.

வழக்கமான தனக்கான உடல்மொழியில் நடித்து அசத்தியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். ஓவர் பில்-டப்போடு வெளியான முதல் பைட் காட்சியை அறவே தவிர்த்திருந்திருக்கலாம். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இந்த மாதிரியான சண்டைக் காட்சிகளை எடுத்துக் கொண்டிருப்பீர்கள். பைட் காட்சியை பார்த்ததும் ரசிகர்கள் சிரித்தது தான் அதிகம்.

பல படங்களுக்குப் பிறகு வடிவேலுவின் காமெடி காட்சிகள் இப்படத்தில் நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது. குழந்தைகளை அதிகமாக கவரும்படியான காமெடிகளை நன்றாகவே வைத்திருக்கிறார் வடிவேலு. படத்தில் இத்தனை ஹீரோயின்கள் ஏன் என்று தெரியவில்லை. எவருக்கும் அந்த அளவிற்கு படத்தில் வேலைகள் இருந்ததாக தெரியவில்லை.

பரதநாட்டியத்தில் இன்னும் தேர்ச்சியான நடிகை வேறு யாரையாவது சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருந்திருக்கலாம். சந்திரமுகி கதாபாத்திரத்திற்கும் கங்கனாவிற்கும் பொருத்தம் இல்லாதது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது.

சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் இருந்த அதே கதையை மீண்டும் இரண்டாம் பாகமாய் எடுத்து வந்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் பி வாசு. எவ்வித சுவாரஸ்ய கதையும் இல்லாமல் அரைத்த பார்த்த கதை தான் மீண்டும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கீரவாணியின் இசையில் பெரிதாக ஒரு விஷேசம் இல்லை. இரண்டாம் பாதி முழுக்க தெலுங்கு வாடை தான்.

சந்திரமுகி 2 – காமெடிக்காக விசிட் அடிக்கலாம்…

Facebook Comments

Related Articles

Back to top button