Spotlightசினிமா

என்.டி.ஆர் – திரிவிக்ரம் மீண்டும் இணைகிறார்கள்! ஹொம்பாலே தரத்திற்கு இணையான பிரம்மாண்டத்தில் உருவாகும் புதிய புராண திரைப்படம் !!

ல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான என்.டி.ஆர் மற்றும் வெற்றிப் படங்களின் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அரவிந்த சமேத வீரராகவா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி, இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்தப் புதிய படத்தின் அறிவிப்பை நடிகர் என்.டி.ஆர் தனது அதிகாரப்பூர்வ X சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். வெளியிடப்பட்ட அறிவிப்பு போஸ்டரில் திரிசூலம், வேல் மற்றும் DNA வடிவமைப்பு இடம்பெற்றிருப்பதுடன், “One Spear, One Purpose… One Divine Reckoning” என்ற டேக்லைன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், வலுவான திரைக்கதை, ஆழமான உணர்வுகள், மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுடன் உருவாகவுள்ளது. இந்திய அளவில் பேசப்படும் மிகப்பெரிய திரைப்பட அனுபவமாக இதை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார். இளைஞர்களின் மனதை கவர்ந்துவரும் அவரது இசை, இந்த பிரம்மாண்ட படைப்பிற்கு மேலும் ஒரு தனித்துவமான பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து தயாரிக்கின்றனர். தெலுங்கு சினிமாவின் வெற்றிகரமான நடிகர்–இயக்குநர் கூட்டணியும், இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் ஒன்றிணைவதால், இந்த படம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றாக உருவாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் படப்பிடிப்பு அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

படக்குழு:

  • நடிகர்: என்.டி.ஆர்
  • கதை, திரைக்கதை, இயக்கம்: திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்
  • இசை: அனிருத் ரவிச்சந்தர்
  • தயாரிப்பு: ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ், என்.டி.ஆர் ஆர்ட்ஸ்
  • தயாரிப்பாளர்கள்: எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு), நந்தமூரி கல்யாண் ராம்

இந்த அறிவிப்பின் மூலம், என்.டி.ஆர் – திரிவிக்ரம் கூட்டணி மீண்டும் ஒரு மாபெரும் திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளது. புராணக் கதைகளையும் நவீன திரை மொழியையும் இணைக்கும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவின் அடுத்த பெரிய நிகழ்வாக உருவாகும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Facebook Comments

Related Articles

Back to top button