
2009ல் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த போர் முடிவுக்கு வருகிறது. அப்போது, கஸ்தூரி என்ற பெண் விடுதலை புலிகளுடன் சேர்ந்து சண்டை புரிகிறார்.
உடன் இருந்தவர்கள் அனைவரும் இறந்துவிட, கஸ்தூரி மட்டும் தப்பித்துக் கொள்கிறார்.
கஸ்தூரி மக்களோடு சேர்ந்து புதிய வாழ்க்கை வாழ எண்ணுகிறார். ஆனால், கஸ்தூரி உடன் இருந்தால் தங்களுக்கும் ஏதாவதுபிரச்சனை வருமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர் மக்கள்.
கடைசியில் இதையெல்லாம் சமாளித்து கஸ்தூரி எப்படி தனது வாழ்க்கையை வாழ்ந்தார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.
சொல்லாத ஒரு கதையை சொல்லியதற்காக இயக்குனரை வெகுவாகவே பாராட்டலாம். படத்தின் வசனங்கள், நடிகர்களின் நடிப்பு என அனைத்தும் படத்திற்கு பலமாக இருந்தது.
படத்தினை ஒரு ஆவணப் படமாக இயக்கியது தான் மிகப்பெரும் படத்திற்கு மிகப்பெரும் சறுக்கலாக அமைந்து விட்டது.
மற்றபடி, படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் மிகவும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
எடுத்த முயற்சிக்காக நிச்சயம் ஒருமுறை விசிட் அடிக்கலாம் ஒற்றை பனை மரத்திற்கு.