Spotlightசினிமா

’பப்பி’க்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிக் கூட்டணி!

எல் கே ஜி, கோமாளி படத்தினை தொடர்ந்து மூன்றாவது படமாக ‘பப்பி’ என்ற படத்தினை தயாரித்திருக்கிறது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல்.

வருண் மற்றும் யோகிபாபு இப்படத்தில் நடித்துள்ளனர். அக்டோபர் மாதம் 11ஆம் தேதி இப்படத்தினை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், பப்பி படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல சக்தி பிலிம் பேக்டர் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே உருவான எல் கே ஜி மற்றும் கோமாளி படத்தினையும் இந்நிறுவனமே தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி மிகப்பெரும் வெற்றியை கொடுத்திருந்தது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக இக்கூட்டணி இணைந்து ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button