Spotlightவிமர்சனங்கள்

பட்டத்து அரசன் விமர்சனம் 3/5

யக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ராஜ்கிரண் நடிக்க உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பட்டத்து அரசன். படத்தின் ட்ரெய்லர் வெகுஜன மக்களை கவர்ந்திழுத்திருந்த நிலையில், திரைப்படம் எப்படி இருந்தது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைப்படி,

ஊரில் மிகப்பெரும் கபடி வீரராக விளங்கி வருகிறார் பொத்தாரி (ராஜ்கிரண்). இவரால், அந்த கிராமத்திற்கு பெருமை கிடைக்கிறது. ஊரில் இவருக்கென்று சிலையும் வைத்திருக்கிறார்கள்.

இவரின் புகழை கெடுக்க நினைக்கும் உள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர். ராஜ்கிரணுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி இறந்துவிட, இவரது மகனாக வரும் ஆர் கே சுரேஷும் கபடி விளையாட்டின் போது இறந்து விடுகிறார்.

இதனால், ஆர் கே சுரேஷின் மனைவியான ராதிகா, ராஜ்கிரணோடு சண்டை போட்டு சொத்தினை சரி பாதியாக பிரித்து எடுத்துச் செல்கிறார். ராதிகாவின் மகனாக வருகிறார் அதர்வா.

இதனால் குடும்பம் இரண்டாக உடைகிறது. முதல் மனைவியின் மகன்கள் ஒருபக்கம், இரண்டாம் மனைவியின் பேரன் அதர்வா ஒரு பக்கம் என இரு குடும்பமாக பிரிகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், ராஜ்கிரணின் வீட்டில் சம்பவம் ஒன்று அரங்கேற, ஊர் மக்கள் பொத்தேரி குடும்பத்திற்கு எதிராக நிற்கிறது.

இச்சுழலில், அதர்வா தனது தாத்தோவோடு நின்று ஊரை எதிர்த்து நிற்கிறார். ஏன் எதற்காக இறுதியின் என்ன நடந்தது என்பது படத்தின் மீதிக் கதை.

இளம் வயது கபடி வீரராக முறுக்கென்று நின்று களத்தில் இறங்கி விளையாடுகிறார் ராஜ்கிரண். படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகளின் தேர்வினை சிறப்பாக தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் சற்குணம்.

நாயகன் அதர்வா, தனது கதாபாத்திரத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். படத்திற்கு நாயகி வேண்டுமே என்ற எண்ணத்தில் தான் நாயகி ஆஷிகா ரங்கநாத் கதாபாத்திரம் வைத்திருப்பார் போல இயக்குனர். ஒரு பாடல் காட்சி தவிர, நாயகியின் கதாபாத்திரம் சொல்லும் அளவிற்கு இல்லாமல் போய்விட்டது.

க்ளைமாக்ஸ் காட்சியில் கபடி விளையாட்டில் இறுதியாக நாயகன் சென்று அனைத்து புள்ளிகளையும் தட்டிச் சென்ற ஹீரோயிசம் காட்சியை தவிர்த்திருக்கலாம். இயக்குனர் சற்குணத்தின் கதை, திரைக்கதை இரண்டும் படத்தின் ஓட்டத்திற்கு கைகொடுத்திருக்கின்றன.

தனது கதையின் உயிரோட்டத்தை மட்டுமே வைத்து படம் இயக்கி வந்த சற்குணம், இப்படத்தில் சற்று சறுக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஹீரோயிசம் இல்லாத, கதையை எடுத்து மீண்டும் வாருங்கள் இயக்குனரே.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதையோடு பயணம் செய்திருக்கிறது.

கதை இன்னும் சற்று துடிப்புடன் இருந்திருந்தால், நம்மையும் படத்து அரசனோடு வீறுநடை போட வைத்திருக்கும்.

இருந்தாலும்

பட்டத்து அரசன் – பக்கா என சொல்லும் அளவிற்கு இல்லாமல் போனது வருத்தமே…

Facebook Comments

Related Articles

Back to top button