Spotlightசினிமா

சில முட்டாள்களை என்ன செய்வது..?? அஜித் ரசிகர்களை திட்டிய சிபிராஜ்!

நேற்று முன் தினம் அஜித் ரசிகர்கள் #RIPvijay என்ற ஹேஷ் டேக்கை கிரியேட் செய்து அதை ட்ரெண்ட் ஆக்கினர். இதனால், சில நடிகர்கள் வெளிப்படையாகவே ஏன் இந்த மாதிரியான முட்டாள் தனத்தை செய்கிறார்கள் என்று குரல் எழுப்பினர்.

இந்நிலையில் நடிகர் சிபிராஜ்ஜும் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அஜீத்தைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறேன் என்கிற பெயரில் அவரது ரசிகர்கள் பலர் முட்டாள்தனமாக நடந்துகொண்டிருக்கிறார்கள்’என்று பதிவிட்டுள்ளார்.

அஜீத் ரசிகர்களின் இந்த அவலட்சணமான பதிவை பல முன்னணி நடிகர்களும், அஸ்வின் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் கண்டித்து வரும் நிலையில் நடிகர் சிபி சத்யராஜும் அப்படிப்பட்டவர்கள் முட்டாள்கள் என்று கண்டித்திருக்கிறார். அவர் தனது பதிவில், ‘சில முட்டாள்கள் எதிர்மறையான ஹாஸ் டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்வதைப் பார்க்கும் போது வெறுப்பாக இருக்கிறது! இதுபோன்ற அமங்கலமான செய்திகள்  ஒரு நபரை மேலும்  வலிமையாக்குகிறது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button