
JK விக்கி இயக்க த்ரியும் ஸ்டூடியோ எஸ் சாண்டி மற்றும். வெள்ளித்திரை டாக்கீஸ் முஜிப் தயாரிக்க மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் , ஹம்சனி பெருமாள், வினோத் மோகன சுந்தரம், தினேஷினீ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பூ சாண்டி வரான்”.
கதைப்படி,
நாயகன் முருகன் பழங்கால தொன்மையை பற்றியும் அவர்களின் வாழ்வியலை பற்றியும் அறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். மலேசியாவில் இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும்போது, அங்கு ஷங்கர் என்பவரை சந்திக்கிறார் முருகன்.
ஷங்கர் தன் நண்பர்கள் அன்பு மற்றும் குரு இருவரோடு இருக்கும் போது நடந்த சம்பவம் ஒன்றை முருகனிடம் சொல்கிறார்.
கதை சற்று பின்னோக்கி செல்ல,
அன்பு, குரு மற்றும் ஷங்கர் மூவரும் நண்பர்கள். அன்பு கால் ஊனமுற்றவர். இவர் பண்டையகால நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார்.
ஒருநாள், பண்டையகால நாணயத்தை வைத்து நாம் ஆவியை வரவைப்போம் என்று மூவரும் முடிவெடுத்து அமானுஷ்ய சக்தியிடம் பேசுகிறார்கள்.
அந்த அமானுஷ்ய சக்தி தன்னொட பெயர் மல்லிகா என கூற, அடுத்தடுத்த நாட்கள் அந்த ஆவியிடம் மூவரும் பேசி வருகின்றனர். ஒருநாள் இரவு மூவரில் ஒருவரான குரு இறந்து விட, மல்லிகா ஆவி தான் குருவை கொன்று விட்டது என்று முடிவு செய்கிறார்கள் ஷங்கரும் குருவும்.
அந்த நாணயத்தின் மறுபக்கம் தான் என்ன .? குரு இறப்புக்கு யார் காரணம் படத்திற்கு பூ சாண்டி வரான் என டைட்டில் வைத்ததற்கு என்ன காரணம் என்பதற்கெல்லாம் இரண்டாம் பாதியில் பதில் வைத்துள்ளார் இயக்குனர்.
முருகன் , அன்பு, குரு,ஷங்கர் என நான்கு கதாபாத்திரத்தில் தோன்றிய நாயகர்கள் நால்வரும் கதாபாத்திற்கு ஏற்ற சரியான தேர்வு.
அக்கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை பூர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் மிரள வைத்திருக்கிறார்கள். பல பேய் கதைகளை வைத்து பல படங்கள் இதற்கு முன் வந்தாலும், பூ சாண்டி வரான் அதற்கு சற்று மாறுபட்ட கதையம்சம் கொண்டு தான் வந்துள்ளது.
காட்சியமைப்பு, கதை நகர்வு என இரண்டையும் மிகக் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் ஜே கே விக்கி.
முகமது அலி ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார்.
டஸ்டின் ரிதுவான் ஷா’வின் பின்னணி இசை கதையோடு நகர்ந்து நம்மையும் கதையினுள் ஒன்ற வைத்ததில் பெரும் பங்கு வகித்திருக்கிறது.
க்ளைமாக்ஸ் படம் பார்ப்பவர்கள் அனைவரையும் சீட்டின் எட்ஜில் உட்கார வைத்ததற்கு இயக்குனருக்கு தனி பாராட்டுகள்.
இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது போன்று படத்தின் முதல் பாகத்தை முடித்துள்ளனர்.
படக்குழுவினருக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்…
பூ சாண்டி வரான் – புது முயற்சியை வரவேற்போம் … காத்திருப்போம் இரண்டாம் பாகத்திற்காக…





