இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “பிரின்ஸ்”.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வரும் வெளியாக இருக்கிறது. தீபாவளி தின கொண்டாட்டமாக வரும் வெள்ளியன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் சிவகார்த்திகேயன், இயக்குனர் அனுதீப், மரியா,அன்புச் செழியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அன்புச் செழியன், “ இத்திரைப்படத்தை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி. சுமார் 650 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். வளர்ந்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயன் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் இருக்கிறார்.
எம் ஜி ஆர், ரஜினி, விஜய்க்குப் பிறகு அனைவருக்கும் பிடித்த நடிகராக தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி.” என்று கூறினார்.