Spotlightசினிமா

மூன்று மதங்களுக்கும் ஒரே ஆலயம்… ராகவா லாரன்ஸ் துவங்குகிறார்!

மூன்று மதங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு அசாத்திய விசயத்தை கையில் எடுத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். சமூகம் சார்ந்த சிந்தனைகளையும் சமூக சேவைகளையும் மேலும் அவர் தனது அறக்கட்டளையின் மூலமாக எத்தனையோ உதவிகளையும் செய்து வருகிறார்.

இப்போது அவர் மத வேறுபாடுகளை கடந்து மனிதம் தான் பெரிது என்பதை உணர்த்தும் வகையில் இந்து கிறிஸ்டின், முஸ்லீம் ஆகிய மூன்று மதத்தினரும் வந்து வழிபடும் படி ஓர் ஆலயம் அமைக்க இருக்கிறார்.

மதங்களாலும் சாதிகளாலும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள் அதனால் தான் இந்த முயற்சி.

நெருப்பிற்கும் பசிக்கும் சாதி மதம் தெரியாது அந்த வகையில் அனைவரும் சமமாக உணவருந்த அந்த ஆலயத்தில் அண்ணதான கூடம் அமைக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானமும் வழங்க இருக்கிறார். இந்த அறப்பணி இதுவரை யாருமே சிந்தித்திராத முயற்சி. ராகவேந்திரர் சுவாமியின் பிறந்த நாளான இன்று இதை அறிவித்துள்ளார். இந்தப்பணிகளை மிகச்சிறப்பாக விரைவில் துவங்க இருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button