Spotlightசினிமா

அவமானப்படுத்தப்பட்ட லாரன்ஸ்… காஞ்சனா படத்திலிருந்து வெளியேறினார்!

2011 ஆம் ஆண்டு லாரன்ஸ் நடித்து இயக்கிய திரைப்படம் ’காஞ்சனா’. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் திருநங்கையாக நடித்திருப்பார். இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் அக்ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமார் நடித்த வேடத்தில் அமிதாப் பச்சன் நடிப்பார் என்று கூறப்படுகிறது. தமிழில் இந்த திரைப்படத்தை இயக்கிய லாரன்ஸ் இந்தியிலும் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் லட்சுமி பாம் என்ற பெயரிடப்பட்ட காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதில் இயக்குனர் என்கிற இடத்தில் லாரன்ஸ் பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் லாரன்ஸ் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக் ஆன லட்சுமி பாம் திரைப்படத்தை தன் இயக்கவில்லை என்று அறிவித்துள்ளார். அந்தப் படத்தில் இருந்து தான் வெளியேறி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மரியாதை இல்லாத இடத்தில் இருந்தும் பயனில்லை என்பதால் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக் உரிமையை அக்ஷய்குமார் இடம் கொடுத்துள்ளதாகவும் அவர்களை அந்த படத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும் பெருந்தன்மையாக முடிவெடுத்துள்ளதாகவும் லாரன்ஸ் கூறியுள்ளார். இதனிடையே படத்தின் முதல் போஸ்டர் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளில் லாரன்ஸின் கருத்துக்களை கேட்காமல் ஹிந்தி படக்குழு தன்னிச்சையாக நடந்து கொண்டதால் லாரன்ஸ் இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டதாக கூறுகிறார்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button