Spotlightவிமர்சனங்கள்

சஞ்சீவன் – விமர்சனம் 3/5

றிமுக இயக்குனர் மணி சேகர் இயக்கியிருக்கும் படம் தான் சஞ்சீவன் இப்படத்தில் வினோத், நிஷாந்த், சத்யா, யாசின் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

கதைப்படி

வினோத், நிஷாந்த், சத்யா, விமல், யாசின் இவர்கள் ஐவரும் நெருங்கிய நண்பர்கள்.. நாயகன் வினோத் ஸ்னூக்கர் விளையாட்டில் திங்காக இருக்கிறார் வழக்கமாக விளையாட்டில் எதிரியை வீழ்த்துகிறார் நாயகன் வினோத்..

நண்பர்கள் அனைவரும் இணைந்து வினோத்தின் பிறந்த நாளை கொண்டாட ஏற்காடு செல்கின்றனர். செல்லும் இடத்தில் அங்கு என்ன நடந்தது என்பதை படத்தின் மீதி கதை.?

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வினோத், நிஷாந்த், சத்யா, விமல், யாசின் இவர்கள் அனைவரும் படத்தின் கதாபாத்திரத்தோடு ஒன்றிணைந்திருக்கின்றனர். ஒவ்வொரு ஒவ்வொரு கேரக்டரும் தனித்துவத்தோடு இருந்தது படத்தின் ஓட்டத்திற்கு பெரும் பலமாக இருந்தது..

திரைக்கதை வசனம் இரண்டும்ம் படத்தில் எந்த விதத்திலும் தொய்வு ஏற்படுத்தவில்லை. பெரிதான கதை எதுவும் இல்லை என்றாலும் படத்திற்கான உயிரோட்டத்தை எந்த இடத்திலும் சிதறாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணி சேகர்…

ஒளிப்பதிவாளர் கார்த்திக் சொர்ண குமார் ஒளிப்பதிவை மிக நேர்த்தியாகவும் அழகான காட்சி அமைப்போடும் கொடுத்து படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னதாக நடக்கும் சேசிங் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக கொடுத்திருக்கிறார்… நாயகி திவ்யா துரைசாமி, அழகாக வந்து செல்கிறார்.

அது மட்டுமல்லாமல் ஸ்னுக்கர் விளையாட்டினை இவ்வளவு நேர்த்தியாக யாரும் இதுவரை கொடுத்ததில்லை என்று தான் கூற வேண்டும். தானுஷ் மேனனின் பின்னணி இசை ஓகே ரகம் தான்…

அழகான உயிரோட்டமாக வாழ்வியலை கொடுத்து நம்மை படத்தோடு ஒன்றி நடைபோட வைத்த இயக்குனர் மணி சேகருக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்… அடுத்தமுறை சற்று கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்தால் தமிழ் சினிமாவில் நீங்களும் ஒரு முத்திரை பதிப்பீர்கள் இயக்குனரே..

Facebook Comments

Related Articles

Back to top button