Spotlightவிமர்சனங்கள்

சத்ரு விமர்சனம் 3/5

நவீன் நன்ஞ்சுண்டன் இயக்கத்தில் கதிர், சிருஷ்டி டாங்கே, லகுபரன் நடிப்பில் உருவாகியுள்ளது ‘சத்ரு’.

பரியேறும் பெருமாள் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, கதிரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘சத்ரு’.

இளம்வயதிலேயே சப்-இன்ஸ்பெக்டர் பதவியேற்று மிடுக்கான அதிகாரியாக வருகிறார் கதிர். பதவியேற்ற சில காலத்திலேயே 2 முறை சஸ்பெண்ட். காரணம் நேர்மை, துணிச்சல்.

மதுரையை பூர்விகமாக கொண்ட 5 இளைஞர்கள், சென்னையில் தங்கி கடத்தல் தொழிலை செய்து வருகின்றனர்.

ஒரு மிகப்பெரிய தொழிலதிபரின் குழந்தையை கடத்திவிடுகிறது இந்த கும்பல். வழக்கு கதிரின் கைக்கு வருகிறது. கடத்திய கும்பல் 5 கோடி கேட்டு மிரட்ட, ஒருவழியாக அந்த கும்பலின் ஒருவனை கண்டுபிடித்து அவனை சுட்டுக் கொன்றுவிடுகிறார் கதிர். சிறுவனையும் காப்பாற்றிவிடுகிறார்.

மேலதிகாரி சொன்னதை கேட்காமல் பணி செய்ததால் கதிரை மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்கிறார் காவல்துறை மேலதிகாரி.

நண்பனை இழந்த அந்த நால்வரும், கதிரின் குடுபத்தில் உள்ள அனைவரையும் கொல்ல நினைக்கிறது. கதிரின் அண்ணன் குழந்தையை கார் ஏற்றி கொல்ல முயற்சிக்கின்றனர்.

குழந்தை மருத்துவனையிலிருக்க குடும்பத்தில் மற்றவர்களையும், நண்பர்களையும் கதிர் காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

ஒரு மிடுக்கான, கம்பீரமான போலீஸ் தோற்றத்தில் நடித்திருக்கிறார் கதிர். அதே வேகம், ஆக்‌ஷன், காதல் என அனைத்தையும் செவ்வெனவே கொடுத்திருக்கிறார் கதிர். படத்திற்கு படம் கதிரின் நடிப்பு மெருகேறிக்கொண்டேதான் செல்கிறது. வில்லனுடன் மோதும் காட்சிகள் அப்ளாஷ்..

ஐந்து வில்லன்களுக்கும் தலைவனாக வருகிறார் லகுபரன். ராட்டிணம் படத்தின் ஹீரோவாக நடித்து, கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து வில்லனாக நடித்ததற்காக லகுபரனுக்கு பாராட்டுகளை தெரிவிக்கலாம்.

பார்வையிலேயே தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறார் லகுபரன். உடன் வரும் மற்ற நால்வரும் சரியான பொருத்தம் தான்.

சுருஷ்டி டாங்கே, சுஜா வருணீ, நீலிமா ராணி உள்ளிட்ட மூன்று பெண்கதாபாத்திரங்களும் இருந்தாலும், அக்கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் இல்லை.

நல்ல ஒரு திரைக்கதை அமைத்திருந்தாலும், ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் லாஜிக் ஓட்டைகளை இயக்குனர் சற்று கவனித்திருக்கலாம்.

கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாடல்கள் எதுவும் படத்தில் வைக்கவில்லை. பின்னனி இசை கதையின் ஓட்டத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

இரண்டாம்பாதியின் நீளத்தை கொஞ்சம் கட் செய்திருக்கலாம்,.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளை அழகாக காட்டியிருக்கிறது. இப்படத்தின் காட்சிகள் பல படங்களின் சாயல்கள் எட்டிப் பார்த்தாலும் ரசிக்கதான் வைத்திருக்கிறது.

சத்ரு – பரபரப்பு..

Facebook Comments

Related Articles

Back to top button