
இயக்கம்: பாலாஜி செல்வராஜ்
நடிகர்கள் : சரவணன், நம்ரிதா, திருச்செல்வம், அருள் சங்கர்
ஜீ 5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது.
கதைப்படி,
வக்கீலுக்கு படித்துவிட்டு, எந்த ஒரு வழக்கையும் எடுக்காமல், நோட்டரியாக காலத்தை ஓட்டி வரும் சரவணன். ஒரு கட்டத்தில் செண்டிமெண்ட் ஒன்றிற்காக பொது நல வழக்கு ஒன்றை பதிவு செய்கிறார்.
அந்த வழக்கு என்னவென்றால், தனது மகள் கடத்தப்பட்ட புகாரை யாரும் விசாரிக்க முன் வராத காரணத்தால், உயர் நீதி மன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறார் குப்புசாமி.குப்புசாமியின் இறப்பிற்கு நீதி வேண்டி வழக்கை கையில் எடுக்கிறார் சரவணன்.
ஆனால், அடையாளம் தெரியாத குப்புசாமி யார்? அவர் மகள் வெண்ணிலா யார்? என்ற பல கேள்விகளுக்கு பதில் காண களத்தில் இறங்கிய சரவணனுக்கு பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் காத்திருக்கிறது.
இறுதியில், தனது வழக்கை வென்றாரா? வெண்ணலாவிற்கு என்ன நடந்தது உள்ளிட்ட பல கேள்வி முடிச்சிகளை அவிழ்த்து விட்டிருக்கிறார் இயக்குனர்.
வக்கீலாக சரவணனின் நடிப்பு சிறப்பு. ஆனால், நடையில் கொஞ்சம் கம்பீரம் இருந்திருந்தால் கதாபாத்திரம் இன்னும் வலுவாக இருந்திருக்கும். நீதிமன்ற காட்சிகளில் தயங்கி தயங்கி வாதாடும் காட்சிகள் இயல்பாக இருந்தது.
சரவணனின் ஜூனியராக வரும் நம்ரிதா சுறுசுறுப்பான நடிப்புடன் தனக்கு கொடுத்த பாத்திரதை கச்சிதமாக செய்திருந்தார்.
இயக்கத்தில் பாலாஜி செல்வராஜ் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும். சரவணன் போன்ற நடிகரிடமிருந்து எப்படியான நடிப்பை வாங்கியிருக்கலாம். ஆனால், அதில் சற்று தவறிவிட்டார் இயக்குனர். 2 மணி நேரம் மட்டுமே இருக்கும் ஒரு கதையை, படமாக எடிட் செய்யாமல் எதற்காக இணைய தொடராக மாற்றினார் என்பது ஒரு கேள்வி. கதையில் ஆங்கானே அவர் வைத்திருக்கும் ட்விஸ்டுகள் வியக்க வைத்தது.
பல மணி நேரம் இழுக்காமல் சட்டென கதையை நகர்த்தியது இயக்குனருக்கு பாராட்டை சேர்க்கிறது.
இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறது.
மொத்தத்தில்,
சட்டமும் நீதியும் – நீதிக்காக போராடும் போராளி




