Spotlightசினிமா

பிப்.3ல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது “செம்பி”

ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் பிரபு சாலமனின் ‘செம்பி’ திரைப்படத்தைப் பிப்ரவரி 3 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது.  சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தில் நடிகை கோவை சரளா, குழந்தை நட்சத்திரம் நிலா மற்றும் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் குமார் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில்  நடித்துள்ளனர். தனது 10 வயது பேத்தி செம்பிக்கு (நிலா) நிகழ்ந்த கொடுமைக்கு, நீதி கேட்கும் வீரத்தாய் (கோவை சரளா) என்ற பழங்குடியினப் பெண்ணைப் பற்றியது தான் இந்த சக்திவாய்ந்த மற்றும் அழுத்தமான  திரைப்படம் செம்பி.

இந்தப் படத்தில் கோவை சரளாவின் நடிப்பு திரை விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.  பலர் இது அவரது திரை வாழ்க்கையின் மிகச்சிறந்த நடிப்பாக இப்படத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளனர். ‘செம்பி’யாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பத்து வயதுக் குழந்தை நட்சத்திரமான நிலா, இந்தப் படத்தைப் பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளையடிக்கும் நட்சத்திரமாக மிளிர்கிறார். ஒளிப்பதிவாளர் ஜீவனின் மனதை அள்ளும் காட்சிகளும், நிவாஸ் K பிரசன்னாவின் தீவிரமான பின்னணி இசையும் ‘செம்பி’ திரைப்படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகிறது.

பிப்ரவரி 3 முதல் செம்பி திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள்

Facebook Comments

Related Articles

Back to top button