டெல்லி: காருக்குள் பெண்ணுடன் மாணவன் ஒருவன் செக்ஸ் வைத்திருக்கும் போது அதிகமான சத்தம் எழுப்பியதால் ஜெயிலுக்கு சென்றுள்ளார்.
டெல்லி குருகிராம் பகுதியை சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் கடந்த புதன்கிழமையன்று அதிகாலை 5 மணிக்கு வித்தியாசமான சத்தம் கேட்டு எழுந்துள்ளார். வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த போது இருட்டாக இருந்துள்ளது. ஆனால், தொடர்ந்து சத்தம் மட்டும் கேட்கவே, வீட்டின் வெளிக்கதவை திறந்து பார்த்துள்ளார்.
வெளிக் கதவின் வலது புறம் கார் ஒன்று நின்றுள்ளது. அதற்குள் இருந்து தான் சத்தம் வருகிறது என்பதை உணர்ந்த பெண், யார் நீங்கள் என கேட்டுள்ளார். ஆனால், காருக்குள் இருந்தவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை. பின்னர், இரண்டாவது முறையாகவும் யார் நீங்கள்? உங்களது பெயர் என்னவென்று சத்தமாக கேட்டுள்ளார். அப்போது, காருக்குள் இருந்த 26 வயதான இளம் பெண், வயதான அந்த பெண்மணியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த வயதான பெண்மணி, காரின் அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது, காரில் இருந்த 20 வயதான இளைஞர், வயதான அப் பெண்மணியை பார்த்து, நீங்கள் ஏன் எங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாது? வாங்க என்ஜாய் பண்ணலாம் என்று கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால், பதற்றமடைந்த அந்த பெண்மணி, சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை எழுப்பியுள்ளார். பின்னர் அவர்கள் இதுகுறித்து காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காருக்குள் செக்ஸ் வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக அந்த ஜோடியை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில், அந்த இளைஞர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருபவர் என்றும், அப்பெண் அவர்கள் கைது செய்யப்பட்ட அதே பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்படும் போது இருவரும் மது அருந்தியிருந்ததாகவும், போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் மறுநாள் காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்பெண்ணை ஜாமீனில் விடுவித்தும், அந்த இளைஞரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது.