
மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் ஒன்று உள்ளது. இந்நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கிறது என்றால் அது உலகம் முழுவதும் சென்றடையும் ஒரு தனிச் சிறப்பை அப்படம் பெரும்.
அப்படியாக பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் படம் சாங்-சி .
அப்பா – மகன் இருவருக்கிடையே நடக்கும் மோதல்..
பத்து மாயாஜால வளையங்களை வைத்து உலகையே ஆட்டிப்படைக்க நினைக்கிறார் தந்தை. அவரை தனது காதல் வலையில் விழ வைக்கிறார் ஹீரோவின் தாய்.
தாய் மறைவிற்கு பிறகு ஹீரோவும் அவரது தங்கையும் தந்தையை விட்டு பிரிகிறார்கள்.
தனது தாயின் வம்சாவளியினர் அனைவரையும் அழிக்க நினைக்கும் தந்தையை எதிர்க்கிறார் ஹீரோ..
மாயாஜால வித்தைக்கும் குத்துச் சண்டை வித்தைக்கும் நடுவிலே நடக்கும் ஆக்ஷன் போர் இப்படத்தின் கதைக்களம்..
ஆரம்பத்தில் சற்று ஸ்லோவாக செல்லும் கதை. சிறிது நேரத்தில் பரபரக்கிறது. பேருந்து சண்டை, கட்டிடத்திற்குள் நடக்கும் சண்டை என இரண்டும் கதையை விறுவிறுப்பேற்றுகின்றன.
இரண்டாம் பாதியில் மாயாஜாலமா அல்லது மனிதனின் திறமையா என குழப்பத்தில் கொண்டு சென்று அடுத்த பாகத்திற்கான தொடக்கத்தையும் கொடுத்து முடித்துள்ளனர்.
ரசிகர்கள் விரும்பும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இருந்தாலு, கதையில் பெரிதான வலு இல்லாமல் இருப்பது சற்று ஏமாற்றம் தான்.
சாங்-சி – அதிரடி ஆக்ஷன் களம்..
படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் நேர்த்தியான தேர்வு.
அதிரடியான ஆக்ஷன் திரைப்படம்.





