
நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “பீஸ்ட்”.
இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், ரசிகர்கள் விஜய்க்காக இப்படத்தை கொண்டாடி வந்தனர். பலவீனமான கதை படத்திற்கு மிகப்பெரும் இழப்பாக இருந்தது.
அனிருத்தின் இசை மற்றும் பாடல் படத்திற்கு பலமாக அமைந்ததால் படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.
இந்நிலையில், இப்படம் வெளியாகி இன்றோடு 50வது நாள் ஆன நிலையில், சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ஒரே ஒரு காட்சி மட்டுமே திரையிடப்படுகிறது. பிரபலங்களில் திரைப்படங்கள் 50 நாளைக் கூட கடக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பது தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் கதைகளில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தலாம் என்பது சினிமா ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.





