Spotlightசினிமா

80 கோடி வரை செலவை இழுத்து வைத்த ‘ஹீரோ’!

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகியுள்ளது ‘ஹீரோ’. இப்படத்தை கே ஜே ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களை திருப்தி படுத்தினாலும், பல தரப்பில் இருந்து கலவையான விமர்சனத்தையே பெற்றது.

ஆரம்பத்தில் இப்படத்தின் செலவு 60 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை சுமார் 80 கோடி வரை இழுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பு செலவு அதிகமாகியுள்ள நிலையில், படத்தின் வியாபாரம் எதுவரை செல்லும் என்று தயாரிப்பு தரப்பு புலம்பி வருகிறதாம்.

வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இப்படத்தினை திரைக்கு கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button