தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வருகிறது ஸ்டெர்லைட் ஆலை. இந்த ஆலையின் விரிவாக்கத்திற்கு தடை விதிக்கக் கோரி, சிதம்பரம் நகர் பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், காலை முதல் தூத்துக்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போராட்டமும் நடைபெற்றது.
ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பல நோய்கள் வருவதாகவும், அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தை அதிர வைத்து விட்டனர்.
Facebook Comments