
சென்னையில் உள்ள பிரபல கல்லூரி மாணவர்கள் சிலர் நேற்று முன் தினம் சாலையில் சிலரை சரமாரியாக அரிவாளால் தாக்கினார்கள்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அனைவரையும் அதிர்ச்சியாக்கியது.
அதன் பின், அதில் ஈடுபட்ட 4 கல்லூரி மாணவர்கள் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பிரபலமான 3 கல்லூரிகளில் 90 ‘ரூட் தல’ மாணவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
90 மாணவர்களுடன் வரும் திங்கட்கிழமை ஆலோசனை நடத்த போலீசார் முடிவு.
மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ‘ரூட் தல’ மாணவர்களையும் அடையாளம் காண முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது…
Facebook Comments




