Spotlightசினிமா

பிரபல நடன இயக்குனர் மரணம்; அதிர்ச்சியில் கோலிவுட்!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்.

சில தினங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சிவசங்கர் மாஸ்டர்.

மருத்துவ உதவிகள் வேண்டும் என்று அவரது மகன் வேண்டுகோள் விடுத்த நிலையில் பல நடிகர்கள் அவருக்கு உதவ முன் வந்தனர்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாஸ்டர் சிவசங்கர் சில மணித்துளிகளுக்கு முன் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு 7.44 மணியளவில் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரது மறைவு அறிந்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். பல உச்ச நட்சத்திரங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய பெருமை சிவசங்கர் மாஸ்டரை சேரும்.

பல படங்களில் தனது நடிப்புத்திறனையும் வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் அவரது மறைவிற்கு பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளன.

Facebook Comments

Related Articles

Back to top button