
வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் விஷ்ணு விஷால். தொடர்ந்து பல தரமான படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.
சமீபத்தில் இவர் நடித்து தயாரித்து வெளியான எஃப் ஐ ஆர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. தனது அடுத்தபடத்திற்கான பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் விஷ்ணு விஷால்.
இந்நிலையில், தான் சமூக வலைதள பக்கத்தில் இருந்து வெளியேறுவதாகவும், ஓய்வு எடுக்க இருப்பதாகவும் கூறி தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார் விஷ்ணு விஷால்.
காரணம் இது தான் என அவர் கூறியிருந்தாலும், நடிகர் சூரி, விஷ்ணு விஷாலின் தந்தை மீது கொடுக்கப்பட்ட பண மோசடி புகார் குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி கேட்பதும், கருத்து தெரிவிப்பதுமாக இருப்பதால் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே விஷ்ணு விஷால் சமூக வலைதள பக்கத்தில் இருந்து வெளியேறியிருப்பதாக சொல்லப்படுகிறது.




