Spotlightஇந்தியா

மேற்கு வங்க அரசுக்கு சம்மன்; மம்தா ஆட்சியின் கதை முடிய போகிறது – ஜீ பி நட்டா சீற்றம்!

கொல்கத்தா சென்ற பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் கார் அணிவகுப்பு மீது திரிணாமூல் காங்கிரஸ் கொடியேந்தி வந்த சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜே.பி.நட்டா, திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் 130 பாஜக வினர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வரப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மம்தாவின் ஆட்சியில் மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக அவர் சாடினார்.

பாஜகவால் மம்தா அரசு நடுங்கிக் கொண்டிருப்பதாகவும் பாஜக தலைவர் விமர்சித்தார்.

இதனிடையே இதற்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, நட்டா நாடகம் ஆடுவதாகவும் அவருடைய கார்கள் அணிவகுப்பு பாதசாரிகளை இடித்து பத்துக்குள்ளாக்கியதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் கல்வீசி தாக்குதல் நடத்தியதற்கு மேற்கு வங்க அரசுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button