
இன்று உலகமே அன்னையர் தினத்தை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், கட்சி தலைவர்கள் பலர் தங்களது அனனையர் தின வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்
உயிரின் கரு!
உணர்வின் திரு!
வாழ்வின் உரு!
வளர்ச்சியின் எரு!
எல்லாம் சேர்ந்தவள் அன்னை!
இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது!
என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்! உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது!
– மு க ஸ்டாலின்
திமுக தலைவர்
ஆயிரம் உறவுகள் அவனியில் இருந்தாலும் அன்னை உறவுக்கு இவ்வுலகில் ஈடு இணை ஏதுமில்லை. என்றுமே தன்னலம் பாராது மற்றவர்களின் நலனை மட்டுமே சிந்தையில் நிறுத்தி ஓயாது உழைக்கும் தியாக உள்ளங்களாம் அன்னையரை எந்நாளும் போற்றுவோம்!
“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என தன்னலம் கருதாமல் தாயுள்ளத்தோடு மக்களின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்து, தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களை இந்நன்னாளில் போற்றி வணங்குகிறேன்.
– ஓ பன்னீர் செல்வம்
தமிழக துணை முதல்வர்
அனைத்து தினமும் அன்னைக்கான தினமே…
ஆனாலும் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் ஆதலால் அணைக்கும் அன்னையை என்றும் துணையாக,தூணாக இருக்கும் அன்னையை எந்நாளும் போல் இந்நாளும் கொண்டாடுவோம்…
அனைவருக்கும் அன்னையர் தின நாள் நல்வாழ்த்துக்கள் …
– தமிழிசை செளந்தர்ராஜன்
தெலுங்கானா மாநில கவர்னர்





