
சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு முன்னணி நாயகனாக நடிக்க உருவாகியுள்ளது ‘கூர்கா’.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சித்தார்த், கரு. பழனியப்பன், பாடகர் எஸ் பி பி , எஸ் பி சரண், உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய கரு பழனியப்பன், ‘ படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். சிலர் ராஜ ராஜன்சோழனைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முடிந்து போன கதையை பற்றி பேசி ஒரு ப்ரோயோஜனும் இல்லை. தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதை பற்றி பேச யாரும் இல்லை.
இப்போ தமிழ்நாட்டுக்கு என்ன தேவையோ அதபத்தி மட்டும் பேசுங்க…. அத விட்டுட்டு ராஜ ராஜ சோழன் பற்றி பேசி என்ன பலன் இருக்கு. இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ என்றார்.
Facebook Comments





