Spotlightசினிமாவிமர்சனங்கள்

ஹனு மான் விமர்சனம் 3.25/5

பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக வெளிவந்த திரைப்படம் தான் ஹானுமான். இப்படத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

அஞ்சானத்ரி என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் தேஜா சஜ்ஜா. இவரின் சகோதரியாக வருகிறார் வரலட்சுமி. தனது தம்பி தேஜா சஜ்ஜா மீது அலாதி பாசம் வைத்திருக்கிறார் வரலட்சுமி.

சின்ன சின்ன திருட்டு வேலையை செய்து அதில் சுவாரஸ்யத்தை தேடுபவர் தேஜா.

சிறுவயது காதலியான அம்ரிதா, படிப்பை முடித்துக் கொண்டு கிராமத்திற்கு வருகிறார்.

அந்த கிராமத்தில் லோக்கல் ரெளடியான ராஜ் தீபக் ஷெட்டி, மக்களை அடிமையாக வைத்திருக்கிறார்.

அம்ரிதா ராஜ் தீபக்கின் பகையை சம்பாதிக்கிறார். அம்ரிதாவிற்காக ராஜ் தீபக்கை எதிர்க்கிறார் தேஜா.

அதுவரை அடங்கிக் கிடந்த தேஜா, திடீரென சக்தி கிடைத்தவராக பலம் படைத்தவராக மாறுகிறார் தேஜா..

அந்த சக்தி கிடைக்க காரணம் அவருக்கு ஒரு அபூர்வ கல் ஒன்று கிடைக்கிறது. அவரிடம் இருக்கும் அந்த அற்புதக் கல்லைக் கைப்பற்ற நினைக்கிறார் வில்லனான வினய்…

இறுதியில் அந்த கல்லை வினய் கைப்பற்றினாரா இல்லையா.? அல்லது தீய சக்தியிடம் இருந்து இந்த உலகை நாயகன் தேஜா காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

காதல், ஆக்‌ஷன், காமெடி என பல கோணங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகன் தேஜா.. சக்தி கிடைத்தப் பிறகு அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் நமக்கு புது எனர்ஜியை கொடுப்பதாக இருக்கிறது.

வி எப் எக்ஸ், சிஜி பணிகள் மிகவும் ரசிக்கும்படியாக கொடுத்தது படத்திற்கு மிகப்பெரும் பலம். பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் சக்தியாகவும் இருக்கிறது.

அம்ரிதா மற்றும் வரலட்சுமி இருவருமே கதாபாத்திரத்திற்கு ஏற்ற கதாநாயகிகள் தான். தெளிவாக தனக்கு கொடுக்கப்பட்டதை செய்திருக்கிறார்கள்.

கதை மற்றும் தொழில்நுட்பம் இரண்டையும் தெளிவாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

ஹனு மான் – ஹிட் மேன்

Facebook Comments

Related Articles

Back to top button