Spotlightசினிமா

விவாத பொருளாக்கப்பட வேண்டிய படம் ‘தோழர் வெங்கடேசன்’!

அரி சங்கர் மற்றும் மோனிகா நடிப்பில் அறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் தான் ‘தோழர் வெங்கடேசன்’.

அரசுப் பேருந்து ஏற்படுத்தும் விபத்தினால் ஒரு சாமானிய மனிதன் எதுவரை பாதிப்படைகிறான் என்பதையும் அவனது வாழ்க்கை என்னவானது என்பதையும் கண்முன்னே நிறுத்தி அனைவரின் பாராட்டினை பெற்ற படம் தான் இந்த ‘தோழர் வெங்கடேசன்’.

பத்திரிகைகளாலும் பெரும் விமர்சகர்களாலும் பெரிதளவில் கொண்டாடப்பட்டது. மேலும், பல திரையரங்குகளில் படத்தை பார்த்த பொதுமக்கள், படத்தை இயக்கிய இயக்குனரையும் தயாரிப்பாளரையும் வெகுவாக பாராட்டினர்.

இப்படத்திற்கு தக்க அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கோரிக்கை வலுத்து வருகிறது. விவாத பொருளாகவும் பேசும் பொருளாகவும் இப்படத்தை கொண்டு வர வேண்டும் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button